சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகள் அனைவருக்குமே விலையுயர்ந்த கார்களை வாங்குவது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டிற்கு குடி போவது என்பதெல்லாம் லட்சியமாக இருக்கும். மும்பையில் உள்ள ரியல் எஸ்டேட் விலை இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இருக்காது. இருப்பினும் பிரபலங்கள் வசிக்கும் பகுதியில் தாங்களும் வசிப்பதுதான் பெரிய இமேஜ் என திரையுலகினர் நினைப்பார்கள்.
அந்த வகையில் பாலிவுட்டின் இளம் நாயகனான ஷாகித் கபூர் தற்போது இருக்கும் வீட்டை விட்டு, 56 கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட் ஒன்றிற்கு குடி போக உள்ளார். மும்பை வொர்லி பகுதியில் உள்ள, த்ரி சிக்ஸ்டி வெஸ்ட் என்ற பெயர் கொண்ட அந்த பிளாட்டின் 42 மற்றும் 43வது மாடியில் தான் ஷாகித் குடியேற உள்ளார். அந்த பிளாட்டிற்கான அனைத்து இன்டீரியர் வேலைகளும் முடிந்துவிட்டதாம்.
அதே பிளாட்டில் தான் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய், அக்ஷய் குமார் - டிவிங்கள் கண்ணா ஆகியோர் குடியிருக்கிறார்கள்.