'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். லகான், தங்கல், பிகே என இவர் நடிக்கும் படங்களுக்கு மொழியை கடந்து ரசிகர்கள் ஏராளம். ரீனா தத்தை முதலில் திருமணம் செய்து கொண்டார் நடிகர் அமீர் கான். இந்த தம்பதிக்கு ஐரா கான், ஜூனைத் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
பின்னர் 2005-ம் ஆண்டு கிரண் ராவை அமீர் கான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இன்று அமீர் கான் - கிரண் ராவ் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது : 15 ஆண்டுகாலம் மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்ந்தோம். ஆனால் நாங்கள் இருவருமே தனித்தனியாக புதிய வாழ்க்கைக்குள் நுழைகிறோம். இனி நாங்கள் கணவன் மனைவி அல்ல. பெற்றோர் மட்டுமே... இந்த முடிவை சில காலத்துக்கு முன்பே எடுத்துவிட்டோம். ஆனால் சில நடைமுறைகளால் அறிவிக்க தாமதம் ஆனது.
நாங்கள் இருவரும் மண வாழ்க்கையில் பிரிந்தாலும் தொடர்ந்து திரைத்துறையிலும், சமூகசேவையிலும், எங்கள் குழந்தையை வளர்ப்பதிலும் இணைந்தே செயல்படுவோம். விவாகரத்து என்பது முடிவு அல்ல. அது இன்னொரு புதிய வாழ்க்கைக்கான தொடக்கம். எங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறோம்'. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.