அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஸ்ரீதேவியின் மகள் என்பதால் செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் நடிகையாக இருக்கிறார் ஜான்வி. அவர் வெளியில் வந்தாலும், சைக்கிளிங் சென்றாலும், வாக்கிங் சென்றாலும் அவரைத் தொடர்ந்து படமெடுத்துத் தள்ளுகிறார்கள் 'பப்பராசி' புகைப்படக் கலைஞர்கள்.
ஜான்வியும் இன்ஸ்டாகிராமில் அவரைப் பற்றிய பதிவுகளையும், புகைப்படங்களையும் அடிக்கடி பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்துக் கொண்டிருப்பார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளன. கடற்கரையில் தனது ஆண் தோழருடன் நீச்சல் உடையில் அவர் குளியல் போட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த ஆண் தோழர் யார் என்பது பற்றி அவரது பதிவில் எந்த ஒரு தகவலும் இல்லை.
“ஒவ்வொரு மங்கலான சூரிய அஸ்தமனம் என்பது பாதி அழகானது தான், ஆனால் அது விரைவானது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.