ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

என்ன தான் எதிர்ப்புகள், விமர்சனங்கள் இருந்தாலும் இந்தியாவில் இதுவரை வெளியான வெப் சீரிஸ்களில் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்து வருகிறது தி பேமிலி மேன் 2. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, ப்ரியாமணி, ஷரத் கேல்கர், மைம்கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இயக்கியிருந்தனர்.
இலங்கை தமிழர்களையும், அங்கு நடந்த போராட்டத்தை இந்த தொடர் தவறாக சித்தரிப்பதாக கூறப்பட்டது. இதற்கு இயக்குனர்களும், நடிகை சமந்தாவும் விளக்கம் அளித்து விட்டார்கள். இந்த நிலையில் ஸ்ரீகாந்த் திவாரி கேரக்டரில் நடித்த மனோஜ் பாஜ்பாய் கூறியிருப்பதாவது:
நாங்கள் ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஒவ்வொரு மனிதருடைய நம்பிக்கையையும், கலாச்சாரத்தையும் மதிக்கிறோம். யாரையும் காயப்படுத்துவதற்காக நாங்கள் எதையும் செய்யவில்லை. முதல் சீசனிலும் சரி, இந்த சீசனிலும் சரி நாங்கள் அரசியல் குறித்துப் பேசவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதற்கே உரிய மனிதத்தன்மையுடன் அணுகி உள்ளோம்.
ஒவ்வொரு கேரக்டரும் அவர்களுடைய சொந்தக் கதையில் ஹீரோதான். இப்போது இத்தொடர் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில் நீங்கள் பயந்த அளவுக்கு அது இல்லை என்பதை நீங்கள் எங்கோ ஓரிடத்தில் உணர்கிறீர்கள். அது உங்களைப் பற்றியும் உங்கள் நம்பிக்கைகளைப் பற்றியும் மிகவும் மரியாதையான வகையில் அன்புடன் பேசுகிறது.
இவ்வாறு மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார்.