'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழில் கார்த்தியுடன் நடித்த சுல்தான் படத்திற்கு பிறகு வேறு படங்களில் ஒப்பந்தமாகாத ராஷ்மிகாமந்தனா, தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பாவில் நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களுமே 2022ஆம் ஆண்டில் திரைக்கு வருகின்றன. இந்த நிலையில் அடுத்தபடியாக பிரபல ஹிந்தி பட தயாரிப்பாளர் சாஜித் நதியாட்வாலா என்பவரும் தனது புதிய படத்திற்கு ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அந்த வகையில், இன்னமும் ஹிந்தியில் அவர் நடித்து ஒரு படம் கூட திரைக்கு வராத நிலையில் மூன்றாவது படத்தில் ஒப்பந்தமாகப்போகிறார். இதனால் 2022ஆம் ஆண்டில் பாலிவுட்டில் ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்து விடுவார் என்கிற பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.