அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
இங்கிலாந்து தொலைக்காட்சி நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி, இந்தியில் 2000ம் ஆண்டில் அறிமுகமானது. இந்த நிகழ்ச்சி தற்போது 21 வருடங்கள் கடந்து 13வது சீசனுக்கு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சியின் 12வது சீசனுக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் தான் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. குணமடைந்ததும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். அப்போது பார்வையாளர்கள் இன்றி அமிதாப்பச்சனும், போட்டியாளரும் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தற்போது 13வது சீசனுக்கான அறிவிப்பை சோனி டி.வி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 10ந் தேதியே இதன் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டதாகவும், மீண்டும் அமிதாப்பச்சன் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும், விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும், சோனி டி.வி தெரிவித்துள்ளது.