ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, இந்தி மற்றும் சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் இதன் இரண்டாம் பாகமான திரிஷ்யம் 2 வெளியாகி முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் இந்த படம் ரீமேக்காகி வருகிறது கன்னடத்தில் இந்த படத்தின் ரீமேக் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இந்தியிலும் இதன் ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோ இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அஜய் தேவ்கன், ஸ்ரேயாவை வைத்து முதல் பாகத்தை தயாரித்த இந்த நிறுவன தயாரிப்பாளர் குமார் மங்கள் பதக். அந்தப்படத்தை வயாகாம் 18 நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார். ஆனால் தற்போது இந்த இரண்டாம் பாகத்தை தான் மட்டுமே தனியாக தயாரிக்க முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து வயாகாம் 18 நிறுவனம் நாங்கள் இல்லாமல் இந்தப்படத்தை அவரால் தனியாக தயாரிக்க முடியாது, எங்களுக்கும் இதில் காப்பிரைட் உரிமை உண்டு என பிரச்சனையை கிளப்பி தற்போது அந்த பிரச்சனை மும்பை உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த நிலையில் இந்தப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வராமல் நாங்கள் திரிஷ்யம்-2 ரீமேக்கின் படப்பிடிப்பை துவங்கப் போவதில்லை என்று குமார் மங்கள் பதக் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.