மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
ஹிந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் - திஷா பதானி, மேகா ஆகாஷ், ஜாக்கி ஷெராப், பரத் உள்பட பலர் நடித்துள்ள படம் ராதே. இப்படம் மே 13-ந்தேதி ஜீ பிளெக்ஸில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. இப்படத்திற்கு நான்கைந்து இசையமைப்பாளர்களுடன் தேவிஸ்ரீ பிரசாத்தும் இசையமைத்துள்ளார்.
மேலும், தெலுங்கில் அல்லு அர்ஜுன் - பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான துவ்வாத ஜெகானந்தம் படத்தில் தனது இசையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சீடிமார் என்ற பாடலையும் ராதே படத்திற்காக ரீமிக்ஸ் செய்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். இந்த பாடல் தெலுங்கு ரசிகர்களைப்போன்று பாலிவுட் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது சீடிமார் ரீமிக்ஸ் பாடல் யு-டியூப்பில்100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை செய்திருக்கிறது. இதையடுத்து சல்மான்கான், பிரபுதேவா மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.