இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
பழம்பெரும் பாலிவுட் நடிகர் மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட். 9 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமாகி இன்றைக்கு அதிகம் சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தெலுங்கில் தயாராகும் ஆர்ஆர்ஆர், இந்தியில் தயாராகும் பிரம்மாஸ்த்ரா போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஆலியா நடித்து வரும் மற்றுமொரு படம் கங்குபாய் கத்திவாடி. இது மும்பையில் வாழ்ந்த பெண் தாதாவின் வாழ்க்கை கதை. இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நிலையில் ஆலியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று நள்ளிரவு ஆலியா பட் தனது இன்ஸ்ட்ராகிராமில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். "அனைவருக்கும் வணக்கம். கொரோனா பாதிப்பு எனக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன். என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
3 பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் நிலையில் ஆலியாபட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இதேப்போன்று பிரபல இந்தி இசையமைப்பாளரும், பாடகருமான பப்பி லஹரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பப்பி லஹரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.