காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் | பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்… |

பஞ்சாப்பை சேர்ந்தவர் ரன்வீர் ஷோரே. பாலிவுட்டில் முன்னணி குணசித்ர நடிகராக இருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹம் தும் சிவா, டிராபிக் சிக்னல், ஆப் கே லியே ஹம், பாம்பே டாக்கீஸ் ஆகிவை முக்கியமான படங்கள். தற்போது மும்பைகார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்கள் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக மெட்ரோ பார்க் 2 தொடரில் நடித்தார்.
ரன்வீர் ஷோரேக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் சமீபத்தில் பழகியர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்று கூறியிருக்கிறார்.