தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தனது டுவிட்டரில் நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்தை துணிச்சலுடன் வெளியிடுவார். இதற்காக அவர் பல மிரட்டல்கள், வீடு இடிக்கப்பட்டது போன்ற பாதிப்புகளை சந்தித்தபோதும் தனது கருத்தை துணிச்சலாக கூறி வருகிறார்.
டில்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
ரிஹானா டுவீட்டுக்கு பதில் தெரிவித்து கங்கனா ரணாவத் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை, ஏனெனில், அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். அமெரிக்காவை போல பிளவுபட்ட தேசத்தை சீனா தனது காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே, உங்களை போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கங்கனா வெளியிட்டிருந்த பதிவுகளை, டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. கங்கனா டுவிட்டர் நிறுவன விதிகளை மீறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கங்கனாவின் பதிவுகள் நீக்கப்படுவதும், அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்படுவதும் அடிக்கடி நடந்து வருகிற ஒன்று.