'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விவசாயிகள் போராட்டம் குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை என அமெரிக்க பாடகி ரிஹானா கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், யாரும் பேசப்போவதில்லை என்றும் அவர்கள் விவசாயிகள் அல்ல பயங்கரவாதிகள் எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்ததால், குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் 400க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டத்தை பற்றிய ஒரு செய்தியை பகிர்ந்து ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பதிவை பலரும் ரீ-டுவிட் செய்தனர். அதுமட்டுமல்லாமல், பிரபலமானவர் விவசாயிகள் போராட்டம் குறித்து பதிவிட்டுள்ளதால், உலகளவில் டிரெண்டானது. இதேப்போன்று ஆபாச நடிகை மியா கலிபாவும் இதுப்பற்றி கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ரிஹானாவை கடுமையாக சாடியுள்ளார். கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: யாரும் அதைப் பற்றி பேசப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் விவசாயிகளே அல்ல. இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் பயங்கரவாதிகள். அதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் நாட்டை சீனா ஆக்கிரமித்து, அமெரிக்காவைப் போல ஒரு சீன காலனித்துவ நாடாக மாற்ற முயற்சிக்கிறது. அமைதியாக உட்கார், முட்டாளே. உங்களைப் போல நாங்கள் நாட்டை விற்பவர்கள் அல்ல. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.