அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? |
தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத்சிங், தெலுங்கில் செக் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் பிப்ரவரி 19ல் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் ஹிந்தியில் ஜான் ஆபிரகாமுடன் அட்டாக், அமிதாப்பச்சனுடன் மே டே, அஜய்தேவ் கான்-சித்தார்த் மல்ஹோத்ராவுடன் தேங்க் ஹாட், மற்றும் அர்ஜுன் கபூர் உடன் சர்தார் அண்ட் கிராண்ட்சன் என நான்கு படங்களில் நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படங்கள் திரைக்கு வருகின்றன.
இதையடுத்து தற்போது டாக்டர் ஜி என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ரகுல் பிரீத் சிங். அனுராக் காஷ்யப்பின் சகோதரி அனுபூத்தி காஷ்யப் இயக்கும் இப்படம், நகைச்சுவை கதையில் உருவாகிறது. ஆயுஷ்மான் குரானா நாயகனாக நடிக்கிறார். அந்த வகையில் தற்போது ஹிந்தியில் மட்டும் ரகுல் பிரீத் சிங்கின் கைவசம் ஐந்து படங்கள் உள்ளன.