‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. தனது மனைவியின் பிரசவத்திற்காக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திலிருந்து பாதியிலேயே நாடு திரும்பினார் விராட் கோலி.
குழந்தை பிறந்த பின் அதற்கான அறிவிப்பை மட்டும் வெளியிட்ட தம்பதியினர் அதன்பின் எந்த அப்டேட்டுகளையும் கொடுக்கவில்லை. சமீபத்தில் குழந்தையின் பெயர் சூட்டு விழாவை கொண்டாடியிருப்பார்கள் போலிருக்கிறது. அலங்கரிக்கப்பட்ட வீட்டில் தங்கள் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து குழந்தையின் பெயர் 'வாமிகா' என அறிவித்துள்ளார்கள்.
“காதல், நன்றி ஆகியவற்றுடன் நாங்கள் வாழ்க்கையை ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால், இந்த குட்டி வாமிகா மொத்தமாக வேறு ஒரு தளத்திற்கு எங்களை கொண்டு சென்றுவிட்டாள். கண்ணீர், சிரிப்பு, கவலை, பேரின்பம், சில நிமிடங்களில், சில நேரங்களில் அனுபவித்த உணர்வுகள்... தூக்கம் குறைவாக உள்ளது, ஆனால், எங்கள் இதயங்கள் நிரம்பியுள்ளன. உங்கள் அனைவரின் வாழ்த்துகள், பிரார்த்தனைகள், நல்ல ஆற்றல் ஆகியவற்றிற்கு நன்றி,” என அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
“எனது மொத்த உலகமும் ஒரே பிரேமில் உள்ளது” என விராட் கோலி அதற்குக் கமெண்ட் போட்டுள்ளார்.