பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
ஜான்சி ராணி லக்சுமிபாய் வரலாற்று படமான மணிகர்னிகாவில் நடித்தார் கங்கனா. தற்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவியில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். அடுத்து முன்னாள் பிரதமர் இந்திராவின் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து கங்கனா தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: நான் இந்திராவாக நடிக்கப் போகிறேன். இதற்காக ஸ்கிரிப்ட் அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. இது அவரின் முழுமையான வரலாற்று படம் அல்ல. அவரது வாழ்க்கையின் சில முக்கியமான காலகட்டங்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றிய படம். இந்திராவின் அரசியல் நிலைப்பாடுகள், செயல்பாடுகளை இளைய தலைமுறைக்கு சொல்லும் விதமாக இந்தப் படம் இருக்கும். பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள், படம் ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. என்று எழுதியிருக்கிறார்.
அவசரநிலை பிரகடனம், பொற்கோவில் தாக்குதல், இந்திரா படுகொலை ஆகியவை பற்றிய படம் என்று கூறப்படுகிறது. கங்கனா நடிக்கும் ரிவால்வார் ராணி படத்தை இயக்கும் சாய் கபீர் இயக்குவார் என்று தெரிகிறது.