சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அனுஷ்கா சர்மா, பிரசவத்திற்காக மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் அனுஷ்கா சர்மாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனை டுவிட்டரில் உறுதி செய்துள்ள கோஹ்லி, 'தாயும் சேயும் நலமாக இருப்பதாக' தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது பதிவில், “உங்கள் அன்பு, பிரார்த்தனை மற்றும் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.