காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கும், பிரபல நடிகை தீபிகா படுகோனும் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். வரும் 14ல், அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் லோக்கோமா பகுதியில் உள்ள டெல் பெல்பி ஆனல்லோ என்ற பிரபல வில்லாவில் தான் திருமணம்.
இந்த வில்லா, பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கலையம்சம் உள்ள கட்டடம். இங்கு திருமணம் முடித்து, இந்தியா திரும்பும் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும், மும்பையிலும், பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கின்றனர்.
இந்தத் திருமணத்திற்கான நகைகளை தேர்வு செய்யும் பணியில் தீபிகா படுகோனின் பெற்றோரும்; உறவினரும் தீவிரமாக இருக்கின்றனர். அவர்களே, டிசைன் செய்து, அதை பொற்கொல்லர்களிடம் கொடுத்து, புதிது புதிதான டிசைன்களில், பிரத்யேகமாக நகைகளை செய்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. இப்படித் தயாராகும் நகைகளில் தாலி மற்றும் செயின் மட்டும் இருபது லட்ச ரூபாய் என்றும், இதர நகைகள் எல்லாம் சேர்த்து மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக தீபிகா படுகோன் திருமணத்துக்காக நகைகள் தயாராவதாகக் கூறப்படுகிறது.