அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

எப்.டி.ஐ.ஐ., எனப்படும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மையத்தின் தலைவர் பொறுப்பை பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ராஜினாமா செய்தார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான நடிகர், இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி அளிக்கும், எப்.டி.ஐ.ஐ., தலைவராக, பிரபல பாலிவுட் நடிகர் அனுபவம் கெர், கடந்தாண்டு அக்டோபரில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்வதாக, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர், ராஜ்யவர்தன் சிங் ரதோருக்கு அனுபம் கெர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர், கூறியுள்ளதாவது: சர்வதேச, டிவி நிகழ்ச்சிக்காக, அமெரிக்காவில் தொடர்ந்து ஒன்பது மாதங்கள் தங்கியிருக்க வேண்டியுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இதேபோன்று, தொடர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையில், மையத்தின் தலைவராக தொடர்வது, முறையானதல்ல. அது மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கும், சிரமத்தை ஏற்படுத்தும். அதனால், இந்தப் பதவியில் இருந்து விலகுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.