வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும். பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் உள்பட பல படங்களில் இணைந்து நடித்தனர். அத்தனை படங்களும் வெற்றி பெற்றது. இதனால் மேட் பார் ஈச் அதர் ஜோடிகளாக வலம் வந்தனர். இருவரும் தீவிரமாக காதலிப்பதாக வந்த செய்திகளை இருவரும் மறுக்காமல் இருந்தனர். இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவது உறுதியாகி இருக்கிறது.
ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் திருமணம் வருகிற நவம்பர் மாதம் நடக்கும் என்று தெரிகிறது. ரன்வீர் சிங், சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா தூதராக உள்ளார். அதனால் தங்கள் நாட்டில் திருணம் செய்து கொள்ளலாம் என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் சுவிட்சர்லாந்து கூறியிருக்கிறதாம்.
தீபிகாவுக்கு பிடித்த நாடு இத்தாலி. அரசு விருந்தினராக பலமுறை அங்கு சென்றுள்ளார். இத்தாலி நாடும் தங்கள் நாட்டில் திருமணம் செய்து கொள்ள வருமாறு அழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமணம் இத்தாலியில் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.