ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி |
ஹேப்பி பாக் ஜாயேகி படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு ஹேப்பி பாக் ஜாயேகி ரிட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்திலும் நடிப்பதற்கு சோனாக்ஷி சின்காவிடம் படக்குழுவினர் கேட்டுள்ளனர். இந்த தகவலை சோனாக்ஷி உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மிக முக்கியமான படத்தில் நடிப்பதற்கு என்னிடம் கேட்டது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. சந்தோஷமாகவும் உள்ளது. முதல் பாகத்தில் மிகவும் விரும்பி நடித்தேன். இந்த படம் அதை போன்றும், அதை விடவும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன். படத்தின் சூட்டிங் துவக்கும் வரை காத்திருக்க முடியவில்லை என்றார்.
இப்படத்தின் சூட்டிங் பஞ்சாப்பில் இந்த மாதம் துவங்கப்பட உள்ளது. இந்த படத்தை முதாஸ்சர் ஆசிஸ் இயக்க உள்ளார். ஆனந்த் எல்.ராய் மற்றும் கிஷ்கா லுல்லா ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் சோனாக்ஷியுடன் டயானா பென்டி, ஜிம்மி ஷெர்கில், அபய் தியோல், அலி பாசில் ஆகியோர் நடிக்க உள்ளனர்.