காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா, அவரது காதலரான நடிகர் ஜாகீர் இக்பால் என்பவரை ஜூன் 23ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளையும் காதல் ஜோடி ஆரம்பித்துவிட்டதாம்.
ஆனால், சோனாக்ஷி இதுவரையிலும் தன் திருமணம் பற்றி அவரது அப்பா நடிகரும், எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவிற்கு தெரிவிக்கவில்லையாம். இது குறித்து சத்ருகன் சின்ஹா, அளித்த பேட்டி ஒன்றில், “தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நான் டில்லிக்கு வந்துவிட்டேன். எனது மகளின் திட்டங்கள் என்ன என்பது பற்றி நான் யாரிடமும் பேசவில்லை. அவர் திருமணம் செய்து கொள்கிறார் என்பதுதான் உங்களது கேள்வி. அவர் எனன்னிடம் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதே அதற்கான பதில்.
செய்திகள் மூலம் மட்டுமே அது பற்றி தெரிந்து கொண்டேன். நானும் எனது மனைவியும் அவர்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்களைத் தெரிவிப்போம். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவருடைய முடிவை நாங்கள் முழுவதுமாக நம்புகிறோம். அவர் எந்தவிதமான தவறான முடிவையும் எடுக்க மாட்டார். சொந்தமாக முடிவெடுக்க அவருக்கு உரிமை உள்ளது. இந்தக் காலத்தில் பெற்றோர்களிடம் பிள்ளைகள் எதற்கும் அனுமதி கேட்பதில்லை. அவர்கள் தகவல் மட்டுமே தெரிவிக்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
சோனாக்ஷி அவருடைய பெற்றோருக்கு இதுவரையிலும் தன்னுடைய திருமணத்தைப் பற்றி எதுவும் சொல்லாதது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.