ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி |
பாலிவுட் சூப்பர் ஹீரோ ஷாருக்கானின் டான் 3 படத்தின் அறிவிப்பிற்காக அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் டைரக்டரான பரன் அக்தர் தற்போது லக்னோ சென்ட்ரல் படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது டைரக்டர் பரன் அக்தரிடம், டான் 3 படத்தின் வேலைகள் தற்போது எந்த நிலையில் உள்ளது என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ஆமாம். எனக்கு அந்த ஐடியா உள்ளது. ஆனால் தற்போது அது வெறும் யோசனையாக மட்டுமே உள்ளது. அதில் இன்னும் உருவாக்க வேண்டிய விஷயங்கள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் படங்களின் வேலைகள் உள்ளது. இப்போது நிஷிகாந்த் கமத் மற்றும் மோஹித் சூரியுடன் லக்னோ சென்ட்ரல் படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன். டான் 3 படம் எடுக்கப்படும். விரைவிலோ அல்லது சில காலத்திற்கு பிறகோ கண்டிப்பாக எடுக்கப்படும் என்றார்.