லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கடந்த 2006ம் ஆண்டில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்த படம் 'டான்'. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து டான் இரண்டாம் பாகத்திலும் ஷாருக்கான் நடித்து கடந்த 2011ம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்த இரண்டு பாகங்களையும் பர்ஹான் அக்தர் தயாரித்து, இயக்கினார்.
ஏற்கனவே பர்ஹான் அக்தர் டான் 3ம் பாகத்தில் ஷாருக்கானுக்கு பதிலாக நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக வைத்து இயக்குவதாக அறிவித்தார். இப்படத்திற்கு நம்ம ஊர் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கூடுதல் திரைக்கதை எழுதுகின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக கியாரா அத்வானியை அறிவித்தனர். ஒரு சில காரணங்களால் இந்த படத்திலிருந்து கியாரா அத்வானி சமீபத்தில் விலகினார். இதையடுத்து இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பை ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலான படப்பிடிப்பை ஐரோப்பா நகரில் நடத்த இப்போது லொகேசன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.