இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
நடிகர் பாபி தியோல் தனது சகோதரர் சன்னி தியோல் உடன் இணைந்து நடித்திருக்கும் படம் போஸ்டர் பாய்ஸ். ஸ்ரேயாஸ் இயக்கியுள்ள இப்படம் மராத்தியில் வெளிவந்த போஸ்டர் பாய்ஸ் படத்தின் ரீ-மேக்காகும். வரும் வெள்ளியன்று படம் ரிலீஸாக இருப்பதால் படக்குழுவினர் அனைவரும் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர். இப்படத்தை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளார் பாபி தியோல்.
இதுகுறித்து பாபி தியோல் கூறியருப்பதாவது, நான்கு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தேன். இயக்குநர் ஸ்ரேயாஸ் இப்படத்தின் கதையை என்னிடம் சொன்னார். பெரும்பாலும் நான் பணக்கார வீட்டு பையனாகவே படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப்படத்தில் ஒரு சின்ன டாவுனில் வாழும் கேரக்டர் என்பதால் எனக்கு செட்டாகுமா என்று முதலில் நடிக்க தயங்கினேன். இருந்தாலும் கதை பிடித்ததால் நடிக்க சம்மதம் சொன்னேன். படமும் முடிந்து ரிலீஸாகிவிட்டது, இப்படத்தை எதிர்பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.