சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகை ஆலியா பட், ராய்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் ஆஷிக்யு 3 படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக பாலிவுட்டில் செய்தி பரவியது. இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள ஆலியா, அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்த டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆஷிக்யு 3 படத்தில் நடிக்க விரும்பவில்லை என்பது போன்று நான் எதுவும் கூறவேயில்லை. அதில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆஷிக்யு மிகவும் ஸ்பெஷலான படைப்பு. அதிலும், முதல் முறையாக என் அப்பாவுடன் சேர்ந்து நடிக்க உள்ளதால் எனக்கு இது இன்னும் ஸ்பெஷலான படம். அனைத்தையும் அதற்கான நேரம் வரும் போது தான் முடிவு செய்ய முடியும். இதுவும் அப்படித்தான் என குறிப்பிட்டுள்ளார்.