பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
கணவர் போனி கபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்துள்ள மாம் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ரவி உதய்வார் இயக்கி இருந்தார். ஆடன் சித்திக் சாஜல் அலி நடித்திருந்தனர். அனய் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்திருந்தார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். மகளை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களை தேடி வேட்டையாடும் ஒரு தாயின் கதை.
இதேபோன்ற கதை அமைப்புடன் இதே ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த இந்தி படம் மாட்ர். இதுவும் மகளை பலாத்காரம் செய்தவர்களை பழிவாங்கும் தாயின் கதைதான். காரில் பலாத்காரம், தாய் தேடி தேடி பழிவாங்கல், தாயை கண்காணிக்கும் போலீஸ் என திரைக்கதையும்கூட ஒரே மாதிரியானவைதான். மாம் படத்தில் ஸ்ரீதேவியின் கணவரின் முதல் மனைவின் மகள் பாதிக்கப்பட்டிருப்பார் . மாட்ரில் சொந்த மகள் என்பதுதான் வித்தியாசம். இதில் ரவீனா கொஞ்சம் சண்டையெல்லாம் போடுவார், ஸ்ரீதேவி சண்டைபோட மாட்டார்.
எது எந்த படத்தின் காப்பி என்று தெரியவில்லை. என்றாலும் சில மாத இடைவெளியில் ஒரே மாதிரியான கதையில் இரண்டு பெரிய படங்கள் வெளிவந்திருப்பது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.