பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
வித்யாபாலன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேகம் ஜான் படத்தில் நடித்திருந்தவர் ஜங்கி பாண்டே. இவரது நடிப்பிற்கு நிறைய பாராட்டுகள் வந்துள்ளன, இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஜங்கி. சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜங்கி, தனது உண்மையான பெயர் ஜங்கி பாண்டே இல்லை என்று கூறினார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறுகையில்..., "என்னுடைய நிஜப்பெயர் சுயாஷ். நான் குழந்தையாக இருக்கும்போது, எங்கள் வீட்டில் வேலை பார்த்த பெண் ஒருவர், என்னை செல்லமாக ஜங்கி... ஜங்கி... என்றே அழைப்பார். அப்போது முதலே என் பெற்றோர்கள், உறவினர்கள் உட்பட அனைவரும் ஜங்கி என்றே அழைக்க தொடங்கிவிட்டனர். பின்னர் அதுவே என் பெயராகிவிட்டது. ஆனால் எனது பள்ளியில் உள்ள பதிவேட்டில் சுயாஷ் என்று தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.