குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
இந்தியன், முதல்வன், பாபா போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த மனீஷா, நேபாளத்தை சேர்ந்த சாம்ராட் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமண பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதோடு மனீஷா புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டார். பின்னர் அதிலிருந்து மீண்டவர் மீண்டும் சில படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது சில படங்களில் நடிக்க கதை கேட்டுள்ளார். குறிப்பாக சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இதனிடையே நடிகை மனீஷா, ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க உள்ளார்.
இதுகுறித்து மனீஷா கூறியிருப்பதாவது... ‛‛ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளேன். நிறைய பேர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இனி என் வாழ்க்கை அந்த குழந்தையை சுற்றி தான் நகரும். குழந்தையை தத்தெடுத்து வளர்க்க மிகவும் ஆவலாய் உள்ளேன். நிச்சயம் என் மகளுக்கு இந்த சமூகத்தில் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.