'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர். இவரின் ஆஸ்தான நாயாகியாக இருந்தவர் நடிகை கஜோல். இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் இந்த நட்பில் தற்போது விரிசல் ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. பேஷன் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவின் 50-வது பிறந்தநாளையொட்டி கரண் ஜோகர் டிச.,5-ம் தேதி விருந்து கொடுத்தார். இதில் தனது பாலிவுட் நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தார், ஆனால் கஜோலை மட்டும் கரண் அழைக்கவில்லை. இதுப்பற்றி விசாரித்ததில் சமீபத்தில் கரணின், ஏய் தில் ஹே முஷ்கில் படமும், கஜோலின் கணவர் அஜய்யின் சிவாய் படமும் ஒரே தேதியில் ரிலீஸானது. இதில் ஏற்பட்ட சிறு பிரச்னையின் காரணமாகவே கரண், கஜோலை விருந்துக்கு அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.