குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
பாலிவுட்டில் இருக்கும் இளம் முன்னணி ஹீரோக்களில் ஷாகித்கபூரும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளியான ‛உத்தா பஞ்சாப்' படம் ஷாகித்திற்கு தோல்வியாக அமைந்தது. தற்போது இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் இவர், சைப் அலிகான், கங்கனா ரணாவத் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் ரங்கூன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் மற்றொருபுறம் படத்திற்கான எடிட்டிங் வேலையும் நடந்து வருகிறது. கூடவே டிரைலருக்கான பணிகளும் மும்முரமாய் நடந்து வருகிறது.
இதனிடையே ரங்கூன் படத்தின் டிரைலரை பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழும் அமீர்கானின் ‛டங்கல்' படத்துடன் வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது. அமீர்கானின் டங்கல் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் அந்தப்படத்துடன் ரங்கூன் டிரைலரையும் வெளியிட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என ரங்கூன் படக்குழு நம்புகிறது.