இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்புடைய வழக்கில் சிறையில் இருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நன்னடத்தை அடிப்படையில் பிப்.25ம் தேதி ரிலீஸாக உள்ளார். இதை அம்மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சஞ்சய் தத். கடந்த, 1993ல், மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக, ஏ.கே.56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், நடிகர் சஞ்சய் தத்துக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர், மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள, எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோர்ட் விதித்த தண்டனைப்படி அவர் இந்தாண்டு இறுதியில் சிறையிலிருந்து விடுதலை பெற வேண்டியது.
இந்நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய் தத், தண்டனை காலத்திற்கு முன்பே விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. கடந்தவாரம் கூட அவர் பிப்., 27ம் தேதி ரிலீஸாக இருப்பதாக செய்திகள் வெளியிட்டு இருந்தோம். இந்தச்சூழலில் வருகிற பிப்.25ம் தேதி சஞ்சய் தத் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. இதை அம்மாநில அரசே உறுதிப்படுத்தி இருக்கிறது.