சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சர்ச்சைகளின் நாயகியாக திகழ்ந்து வரும் மல்லிகா ஷெராவத், நடிகர்கள் ஐயிட்டம் பாடலுக்கு ஆடுவது குறித்து தற்போது கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மல்லிகா ஷெராவத், தற்போது டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தில் அனோகி தேவி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அரசியல் சார்ந்த படம் என்பதால், அரசியல் வசனங்கள் பேசி, மல்லிகா நடித்துள்ளார். கவர்ச்சி நடிகை எப்படி, இதுபோன்ற வேடங்களில் நடிக்க முடியும் என்று பல்வேறு தரப்புகளிலிருந்து கேள்விக்கணைகள் எழுந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில் மல்லிகா பேசியுள்ளதாவது, ஜான் ஆபிரகாம் கூட தான், பல்வேறு படங்களில் நீச்சல் உடையில் நடித்து வருகிறார். ஐயிட்டம் பாடலுக்கும் நடனமாடுகிறார். அவர் ஹீரோயிச படங்களில் நடிப்பதில்லையா? நடிகைகள் மட்டும் வேறு கேரக்டர்களில் நடிக்கக்கூடாதா? என்று மல்லிகா கேட்டுள்ளார். இது பாலிவுட் திரையுலகில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.