சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் | ரயில் பைட், ஆட்டமா தேரோட்டமா... : ‛கேப்டன் பிரபாகரன்' மலரும் நினைவில் ஆர்.கே.செல்வமணி | 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் ரத்தாகுமா ? | 'கேப்டன் பிரபாகரன்' காட்சியைக் காப்பியடித்த 'புஷ்பா 2' | ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் சாத்தியமா... : கோலிவுட் தகவல் என்ன...? | 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் மம்முட்டியின் ‛சாம்ராஜ்யம்' | ஷாஜி கைலாஷ் டைரக்சனில் பழிவாங்கும் கதையில் நடிக்கும் ஜோஜூ ஜார்ஜ் | 6 கோடியில் எடுத்து 100 கோடி வசூல் செய்த கன்னட படம் ; காந்தாராவுக்கு பின் அடுத்த சாதனை |
ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த தனுசுக்கு அப்படம் எதிர்பாராத வெற்றியை கொடுத்தது. அவர் அப்படத்தில் நடித்தபோது பாலிவுட்டின் ஆஜானபாகு நடிகர்களெல்லாம் இவர் என்ன பெரிதாக சாதித்து விடப்போகிறார் என்ற கணக்கில்தான் பார்த்தனர். ஆனால், அப்படம் வெளியானபிறகுதான் தனுசுக்குள் இருக்கும் மெகா நடிகனைப்பார்த்து அசந்துபோய் நின்றனர்.
அதோடு, அந்த படமும் ஒரு வாரத்திலேயே 100 கோடி வசூலித்து இந்தி சினிமாவின் வசூல் சாதனை படப்பட்டியலில் சேர்ந்து கொண்டது. அதனால்தான், தற்போது அமிதாப்பச்சன் நடிக்கும் ஷமிதாப் படத்திலும் மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து தனது டுவிட்டரில் அவ்வப்போது பாராட்டி வருகிறார் அமிதாப்பச்சன்.
இந்த நிலையில், தற்போது தமிழில் தனுஷ் நடித்து வெளியாகியுள்ள வேலையில்லா பட்டதாரி படத்தையும் அடுத்து இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் நடைபெற உள்ளதாம். தமிழில் நடித்த தனுஷே நாயகனாக நடிக்க, மற்ற நடிகர்-நடிகைகள் அனைவரும் பாலிவுட் கலைஞர்கள் நடிக்கிறார்களாம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.