100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
'ஹம்சகல்ஸ்' படம் வெளியான அன்றே தோல்விப் படம் என்று உறுதி செய்யப்பட்டாலும் அந்த படத்தைப் பற்றிய பேச்சுக்கள் மட்டும் குறைந்தபாடில்லை. சில நாட்களுக்கு முன் படத்தில் மூன்று நாயகியரில் ஒருவராக நடித்த பிபாஷா பாசு படத்தைப் பார்த்து முடித்ததும் தான் வேதனை அடைந்ததைப் பற்றித் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான காரணம் என்ன என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதனிடையே இது பற்றி பேசிய படத்தின் தயாரிப்பாளரான வஷு பக்னானி, “இனி, பிபாஷா பாசுவுடன் பணி புரிய மாட்டேன். அவர் என்னுடைய மகனின் தோழி, மிகவும் நல்ல பெண் என்று இயக்குனர் சஜித்திடம் சொன்னேன். அவரால் எங்களுக்கு பிரச்சனை வரும் என்று எப்போதுமே நினைத்ததில்லை. அவருக்கு என்ன பிரச்சனை என்று எங்களுக்குத் தெரியவே தெரியாது.
இந்த படத்திற்காக அவரை ஒப்பந்தம் செய்து பணத்தைக் கொடுத்த போதே அவருடைய கதாபாத்திரம் என்ன என்பதை சொல்லிவிட்டோம். ஆனால், சமூக வலைத்தளங்களில் அவருடைய கருத்தை அப்படி வெளியிட்டிருக்கக் கூடாது. இந்த படத்தில் நாயகர்கள் அனைவருமே மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார்கள், படமே அவர்களைச் சுற்றித்தான் அமைந்திருக்கிறது. மற்ற ஹீரோயின்களுக்கும் படத்தில் சிறு வேடம்தான். அதுதான் பிபாஷாவுக்குப் பிரச்சனை என நினைக்கிறேன். ஹீரோக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கக் கூடாது என்று நினைத்தாரோ என்னமோ தெரியவில்லை, ”என படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
எப்படியோ, ஓடாத ஒரு படத்திற்கு எப்படி நன்றாக விளம்பரம் சேர்ப்பது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் என பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.