எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |
கனடா நாட்டின் நீலப்பட நடிகை சன்னி லியோன், தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சன்னி அரை நிர்வாண ஆட்டம் போட்டிருப்பது பற்றிய செய்தி இப்போது வெளியாகி இருக்கிறது.
மும்பை-புனே நெடுஞ்சாலையில் உள்ள 7 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 3 நாட்கள் வைர வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்து வந்திருக்கிறது. அதன் இறுதி நாளில் பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த விருந்து நிகழ்ச்சியில் சன்னி லியோனின் நடனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த சன்னியின் நடன நிகழ்ச்சியின் இறுதி பகுதியில் சன்னி லியோன் தன் மேலாடையை கழற்றி வீசிவிட்டு ஆடியிருக்கிறார். இதற்காக சன்னி லியோனுக்கு 40 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவும், படங்களும் இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. அரை நிர்வாண ஆட்டம்போடும் சன்னியை ஒருவர் தன் முதுகில் சுமந்து சுற்றுகிறார். அவருக்கு முத்தம் கொடுக்கிறார். மற்றவர்கள் அதை பார்த்து சிரிக்கிறார்கள். இப்படியாக காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இதனை சன்னி லியோன் மறுத்திருக்கிறார். "நான் தனியார் நிகழ்ச்சி எதிலும் கலந்து கொண்டு ஆடவில்லை. வெளியாகி இருக்கும் புகைப்படங்களும், வீடியோவும் மார்பிங் செய்யப்பட்டவை" என்று தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.