மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
ஒரு காலத்தில் நீலப்பட நடிகையாக பிரபலமாகி பின்னர் சினிமாவில் நுழைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடுபவராகவும் கதையின் நாயகியாகவும் நடித்து தற்போது அதிக அளவில் ரசிகர்களை பெற்றிருப்பவர் நடிகை சன்னி லியோன். தமிழ், மலையாள படங்களிலும் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். இவருக்கு நிஷா என்கிற மகளும் நோவா மற்றும் அஸர் என்கிற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஆச்சரியமாக இதில் நிஷா இவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் பெண் குழந்தை. அதேபோல இரண்டு மகன்களும் வாடகைத்தாய் முறையில் கருத்தரித்து பிறந்தவர்கள் என்பதும் இன்னொரு ஆச்சரிய செய்தி. சமீபத்தில் நடிகை சோஹா அலிகான் நடத்திய ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது, இந்த தகவலை கூறியுள்ளார் சன்னி லியோன்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “எனக்கு ஆறு முறை குழந்தை கருத்தரித்து என் உடல் நிலை மற்றும் மருத்துவ காரணங்கள் காரணமாக அவை இறந்தே பிறந்தன. அப்போதுதான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அந்தசமயத்தில் எங்கள் முன்னால் கடவுளே கைகாட்டியது போல 18 மாத குழந்தையாக நிஷா வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் இவள் தான் என்னுடைய மகள் என்கிற உணர்வு உடனே தோன்றியது. சொல்லப்போனால் நாங்கள் அவளை தத்து எடுக்கவில்லை. அவள் தான் விரும்பி எங்களை தத்து எடுத்தாள். அதன் பிறகு வாடகை தாய் முறையில் இரண்டு மகன்கள் பிறந்தார்கள்” என்று கூறியுள்ளார்.