பாத்ரூம் பிரஷ் போன்ற மீசையுடன் ஒருவர் வேண்டும் : தொடரும் பட வில்லன் கிடைத்தது இப்படித்தான் | மீண்டும் பிரபாஸ் உடன் இணையும் தீபிகா படுகோன் | பஹத் பாசில் படத்திற்கு திரைக்கதை எழுதும் வில்லன் நடிகர் | விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' |
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோரின் தாயாரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மாமியாருமான நிர்மல் கபூர் நேற்று மாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 90 வயதான இவர் மருத்துவ சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.. பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று இவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சுரீந்தர் கபூரின் மனைவியான நிர்மல் கபூருக்கு போனி கபூர், அனில் கபூர், சஞ்சய் கபூர் என மூன்று மகன்களும் மற்றும் ரீனா கபூர் என்கிற மகளும் இருக்கின்றனர். இதில் போனி கபூர், அனில் கபூர் மற்றும் அவரது வாரிசுகள் திரையுலகில் தற்போது பிரபலமாக இருக்கின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் தான் நிர்மல் கபூரின் 90வது பிறந்தநாளை குடும்பத்தினர் விமரிசையாக கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.