ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மீசை முளைக்காத வயசிலேயே நடிகரானவர் தனுஷ். ஆனால் இப்போது பலரும் பெருமையாக பேசும் நடிகராக வளர்ந்து நிற்கிறார். அதோடு, தமிழ் சினிமாவில் மட்டுமே தான் தேங்கி விடக்கூடாது என்று இப்போது ராஞ்சனா என்ற படத்தின் மூலம் இந்தியிலும் கால் பதித்துள்ளார். ஆனந்த் எல்.ராய் என்பவர் இயக்கும இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பதால் இந்தி சினிமா வட்டாரங்களில் ராஞ்சனா பேசப்படும் படமாகியிருக்கிறது.
அதோடு, தனது கேரியரில் ராஞ்சனா தன்னை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் படமாக நினைக்கும் தனுஷ், தமிழிலும் அப்படத்தை அம்பிகாபதி என்று வெளியிடுவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். இப்படம் பற்றி அவர் கூறுகையில், நான் இதுவரை எத்தனையோ காதல் கதைகளில் நடித்திருக்கிறேன். ஆனால், இந்த படம் அம்பிகாபதி-அமராவதி காதலுக்கு இணையான உயிரோட்டமான காதல் கதை. ஒரு ஏழை பையனும், பணக்கார பொண்ணும் காதலிப்பது போன்ற வழக்கமான தொடக்கமாக இருந்தாலும், அதன்பிறகு வரும் காட்சிகள் மனதை தொடக்கூடியதாக இருக்கும்.
இந்தியில் நான் நடிக்கும் முதல் படம் பேசப்படக்கூடிய, இந்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கதையை தேர்வு செய்தேன் என்று சொல்லும் தனுஷ், இப்படம் தமிழ் ரசிகர்களின் மனதையும் கட்டாயம் டச் பண்ணும் என்கிறார்.