‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
"அமெரிக்கா, உலகின் வல்லரசாக திகழ்ந்தாலும், அந்த நாட்டை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள், தங்கள் ஜனாதிபதியை பற்றியோ, தங்கள் நாட்டைப் பற்றியோ, விமர்சித்து, படம் எடுப்பதற்கு பயப்படுவது இல்லை. அந்த வகையில், அமெரிக்கா அதிபரின் அலுவலகமான, வெள்ளை மாளிகையை பற்றிய சம்பவங்களை மையமாக வைத்து, இந்த படத்தை எடுத்துள்ளனர். அமெரிக்க அதிபரை பாதுகாக்கும், ரகசிய ஏஜன்டாக பணியாற்ற வேண்டும் என்பது, ஹீரோவின் கனவு. ஆனால், அந்த வேலைக்கான தகுதி இல்லை என, அவர், நிராகரிக்கப்படுகிறார். இதனால், அமெரிக்க போலீஸ் துறையில், பணிக்கு சேருகிறார். ஒரு நாள், வெள்ளை மாளிகையை சுற்றி காட்டுவதற்காக, தன் மகளை அழைத்துச் செல்கிறார். அப்போது பார்த்து, அமெரிக்காவின் துணை ராணுவப் படை, வெள்ளை மாளிகையையும், அதிபரையும், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இதனால், அமெரிக்க அரசியலில், ஒரே குழப்பமும், பரபரப்பும் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிபரையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக, ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார், ஹீரோ. அதிபரை காப்பாற்றுகிறரா என்பது தான், படத்தின் விறு விறுப்பான முடிவு. இந்த படம், இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது.