சம்பளமா? காப்பிரைட்டா?: இசை அமைப்பாளர்களுக்கு மலையாள தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை | சீரியல் நடிகை மான்சி ஜோஷிக்கு திருமணம் | தந்தை மோகன் பாபுவை தாக்கிய புகாரில் மஞ்சு மனோஜ் கைது | லாஸ்லியா வாழ்வில் இப்படி ஒரு சோக சம்பவமா? | பிளாஷ்பேக்: சேலம் சிறைச்சாலையில் நடத்தப்பட்ட ஒரே படப்பிடிப்பு | பிளாஷ்பேக்: ஏவிஎம்மின் மூன்று படங்களை உதறி தள்ளிய நடிகை | ஜி.டி. நாயுடு படத்தில் இணைந்த பிரபலங்கள் | 'மதராஸி' என்று டைட்டில் வைத்தது ஏன்? - ஏ.ஆர். முருகதாஸ் தகவல் | ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கமிட்டான சிவகார்த்திகேயன்! | அறுவை சிகிச்சை குறித்து ஸ்ருதிஹாசனின் பதில்! |
மும்பையை சேர்ந்த ஒரு செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர் நிஷா பாட்டீல். இளம் வயதில் இருந்தே சஞ்சய் தத்தின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். அவரது படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 62வது வயதில் இறந்தார்.
அதன் பிறகு அவரது குடும்பத்தினர் அவரது சொத்துகள் பற்றி கணக்கெடுக்கையில் இறப்பதற்கு முன்பு தனது வங்கி கணக்கில் உள்ள பல கோடி ரூபாயை சஞ்சய் தத்தின் வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்று வங்கிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதோடு தன் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் சஞ்சய் தத்திடம் கொடுத்து விட வேண்டும் என்றும் உயில் எழுதி வைத்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு 72 கோடி ரூபாய்.
இதுகுறித்து அந்த குடும்பத்தினரும், வங்கியும் போலீசில் புகார் அளித்தது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நிஷா பாட்டீல் தனது கடைசி காலத்தில் மனநலம் சரியில்லாமல் இருந்ததும், ஆனால் அவர் தீவிர சஞ்சய் தத் ரசிகர் என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து இது தொடர்பாக சஞ்சய் தத்திடம் போலீசார் பேசி உள்ளனர். இதை கேட்டு சஞ்சய் தத் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்துள்ளார்.
இதற்கு முன்பு தான் அந்த ரசிகையை ஒரு முறை கூட நேரில் பார்க்கவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்த சஞ்சய் தத், இந்த விவகாரம் தனக்கு வேதனை தருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவரது சொத்துகள் எதுவும் தனக்கு வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.
சஞ்சய் தத்தின் வழக்கறிஞர் இது குறித்து கூறும்போது, ''நாங்கள் அந்த பணத்திற்கு உரிமை கோரவில்லை. சொத்துகள் அந்த ரசிகையின் குடும்பத்திற்குக் கிடைக்கத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.