சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

பாலிவுட்டின் நம்பர் ஒன் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான் மும்பையில் மன்னாட்டில் ஒரு பிரமாண்டமான பங்களாவில் வசித்து வருகிறார். கிட்டத்தட்ட 2446 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள நிலத்தில் அவர் ஆடம்பரமான வீடு கட்டியுள்ளார். அதே சமயம் அந்த நிலத்தை வேறு ஒருவரிடம் இருந்து தன்னுடைய மற்றும் தனது மனைவியின் பெயரில் 99 வருட குத்தகையாக 2001ல் அவர் பெற்றிருந்தார். கடந்த 2019ல் அதன் ஓனர்ஷிப் மாற்றுவதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையாக அதன் மதிப்பில் 25 சதவீதம் தொகையை அதாவது 27.5 கோடி ரூபாயை அரசுக்கு வரியாக செலுத்தி இருந்தார்.
ஆனால் பின்னர் அவர் வரி கணக்கை சரிபார்த்த போது தன்னிடம் கூடுதலாக வசூலித்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து கலெக்டர் அலுவலகம் வழியாக மஹாராஷ்டிரா அரசுக்கு தகவல் தெரிவித்தார் ஷாருக்கான். அதனை ஆய்வு செய்த மும்பை அரசு ஷாருக்கான் 9 கோடி ரூபாய் கூடுதலாக செலுத்தி இருப்பதை கண்டுபிடித்துள்ளதுடன் விரைவில் அந்த தொகை ஷாருக்கானுக்கு திருப்பி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.