'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகை மீனாட்சி ஷேஷாத்ரி, நடிகர்கள் ராகுல் ராய் மற்றும் தீபக் திஜோரி ஆகியோர் ஏழை மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை பேர்ல் குழும நிறுவனங்களின் ரோனி ரோட்ரிக்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்.
மீனாட்சி சேஷாத்ரி கூறுகையில், ‛‛ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியது எனது அதிர்ஷ்டம், இருப்பினும் ரோனி ரோட்ரிகஸின் இந்த நல்ல முயற்சி, இங்கு வந்தது எனக்கு உண்மையான மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.
தீபக் திஜோரி கூறுகையில், ‛‛ரோனி ரோட்ரிக்ஸ் மிகவும் நல்ல மனிதர். அனைவரையும் சமமாகப் பார்க்கிறார், மக்களை மகிழ்ச்சியடையச் செய்வதில் தொடர்ந்து பணியாற்றுகிறார். நான் நடிக்க ஆரம்பித்தபோது மீனாட்சி சேஷாத்ரியுடன் ஒரு படம் வாய்ப்பு கிடைக்குமா என்று ஆசைப்பட்டேன். ராகுல் ராய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்தது, எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இன்று நான் மீனாட்சியின் அருகில் அமர்ந்தேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம்'' என்றார்.