புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பாலிவுட்டின் டாப் வசூல் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் அக்ஷய்குமார். ஆனால், கடந்த சில வருடங்களில் அவர் நடித்து வெளிவரும் படங்கள் 50 கோடி வசூலைக் கடப்பதற்கே மிகவும் தள்ளாடி வருகிறது. உச்சத்தில் இருந்த ஒருவரது மார்க்கெட் இப்படி பாதாளத்திற்குச் சென்றுவிட்டது குறித்து பாலிவுட்டினரே பெரும் கவலை அடைந்துள்ளார்கள். எப்படியாவது அவர் மீண்டு வர மாட்டாரா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அக்ஷய்குமார் நடித்து இந்த வருடத்தில் வெளியான 'படே மியான் சோட்டே மியான், சர்பிரா, கேல் கேல் மெய்ன்' ஆகிய படங்கள் தோல்விப் படங்களே. இதில் 'சர்பிரா' படம் அடுத்த வாரம் அக்டோபர் 11ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும், 'கேல் கேல் மெய்ன்' படம் அக்டோபர் 9ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது.
சூர்யா நடித்து வெளிவந்த 'சூரரைப் போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக் தான் 'சர்பிரா' என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. தமிழில் அப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று, சில தேசிய விருதுகளையும் வென்றது. மேலும், அந்தப் படத்தை 'உடான்' என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்து சில ஆண்டுகளுக்கு முன்பே ஓடிடி தளத்தில் வெளியிட்டனர்.
அதனால்தான், அதன் ஹிந்தி ரீமேக்காக அக்ஷய்குமார் நடித்த 'சர்பிரா' படம் தியேட்டர்களில் வெளியானாலும் ஓடவில்லை என்பது அவரது ரசிகர்களின் குறையாகவும், புகாராகவும் உள்ளது.