ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? |

நடிகர் அமிதாப்பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சன் மும்பையில் 6 அபார்ட்மென்ட்களை வாங்கியுள்ளார். மும்பையின் போரிவாலி பகுதியில் உள்ள ஓபராய் ஸ்கை சிட்டி புராஜக்ட்டில் 57வது தளத்தில் உள்ள 6 அபார்ட்மென்ட்களை கடந்தமாதம் 28ம் தேதி பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மொத்தம் 4894 சதுர அடி கொண்ட அந்த அபார்ட்மென்ட்கள் சதுர அடி 31,498 ரூபாய் விலை என்கிறார்கள். அதற்காக மொத்தம் 10 கார் பார்க்கிங் இடங்கள் இருக்கிறதாம். கடந்த 2014ம் ஆண்டில் அதே பில்டரிடமிருந்து 41 கோடிக்கு வாங்கிய அபார்ட்மென்ட் ஒன்றை 2021ல் 45 கோடிக்கு விற்றார் அபிஷேக்.
மும்பையில் வீடுகள் வாங்குவது பாலிவுட்டி நடிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. புதிதாக பெரிய வசதிகளுடன் உருவாகும் அபார்ட்மென்ட்களை அவர்கள் ஆர்வமுடன் வாங்குவார்கள். சமீப காலங்களில் தென்னிந்திய நடிகர், நடிகைகளுக்கும் மும்பையில் வீடு வாங்குவதில் ஆர்வம் அதிகாரித்து வருகிறது.