'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
புராண கால இதிகாசமான ராமாயணத்தை தழுவி வெவ்வேறு படங்கள் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்தவகையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ், சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஹனுமான் ஆகிய படங்களை தொடர்ந்து ராமாயண் என்கிற பெயரிலேயே ஹிந்தியில் ஒரு படம் உருவாக உள்ளது.
ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவரது ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் நடிகர் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் ஹனுமன் ஆகவும் நடிக்கிறார்கள் என்றும் தகவல் வெளியானது.
அதேசமயம் சாய் பல்லவி கால்சீட் பிரச்னை காரணமாக இந்த படத்தில் வெளியே இருந்து வெளியேறி விட்டார் என்றும், யஷ் இந்த படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகவே இல்லை என்று சொல்லிவிட்டதாகவும் கூட ஒரு தகவல் வெளியானது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது இந்த படத்தில் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தசரத சக்கரவர்த்தி கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து படக்குழுவினரிடம் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.