''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சல்மான்கான், கத்ரீனா கைப் கூட்டணியில் டைகர் படத்தின் மூன்றாம் பாகமாக ‛டைகர் 3' உருவாகி உள்ளது. மனீஷ் சர்மா இயக்கி உள்ளார். உளவாளி தொடர்பான கதையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க ஆக் ஷன் காட்சிகளாக வந்துள்ளது. சல்மான் மட்டுமின்றி கத்ரீனாவும் ஆக் ஷனில் தூள் கிளப்பி உள்ளார். யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு நவ., 12ல் ஞாயிறு அன்று படத்தை ரிலீஸ் செய்கின்றனர். நவம்பர் 13 புதிய சந்திரன்/ அம்மாவாசை நாள். நவம்பர் 14 கோவர்தன் பூஜாவுடன் சேர்த்து குஜராத்தியின் புது வருடமாகவும் அமைகிறது. ஆகையால் இந்த பண்டிகை கால விடுமுறையை குறிவைத்து படத்தை இந்த தேதியில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளது.