ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் 'ஜவான்' திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு ஷாரூக்கான் நடித்து வெளிவந்த 'பதான்' படத்தின் முதல் நாள் முன்பதிவு ஒரு லட்சத்து பதினேழாயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதே சாதனையாக இருந்தது. முதல் நாள் வசூலாக இந்தியாவில் 60 கோடிக்கு அதிகமாகவும், உலகம் முழுவதும் 120 கோடிக்கு அதிகமாகவும் வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருட ஜனவரியில் வெளிவந்த 'பதான்' படம் ஆயிரம் கோடி வசூலைக் கடந்த சாதனை படைத்த நிலையில், 'ஜவான்' படமும் அப்படி ஒரு சாதனை படைத்தால் ஒரே ஆண்டில் இரண்டு 1000 கோடி படங்களைக் கொடுத்து முதல் நடிகர் என்ற பெருமையைப் பெறுவார் ஷாரூக்கான்.