பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப் என ஒவ்வொரு மொழியிலிருந்தும் முக்கியமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதனால் அனைத்து மொழிகளிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஜாக்கி ஷெராப் ஏற்கனவே ரஜினியுடன் கோச்சடையான் உத்தர் தக்ஷின் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். இருவருக்கும் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலான நட்பு இருந்து வருகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் ஜாக்கி ஷெராப்.
“படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றியபோது, இத்தனை வருடங்களில் அவர் கொஞ்சமும் மாறவில்லை என்பதை முதல் நாளிலேயே தெரிந்து கொண்டேன். ஜெயிலர் படத்தில் எனது கடைசி நாள் படப்பிடிப்பின்போது எனக்கு முன்னதாக படப்பிடிப்பை முடித்து வீட்டிற்கு கிளம்புவதற்காக காரில் ஏறினார் ரஜினிகாந்த். அதன்பிறகு எனக்கு அன்றுடன் படப்பிடிப்பு முடிவடைகிறது என்பதை தெரிந்து கொண்டதும் உடனே காரில் இருந்து இறங்கி பிரியா விடை கொடுப்பதற்காக என்னை நோக்கி வந்தார்.
அவர் மட்டுமல்ல அவருடன் சேர்ந்து படப்பிடிப்பில் இருந்த சுமார் 500 பேர் அவருடன் சேர்ந்து வந்து எனக்கு பிரியாவிடை கொடுத்தனர். எனக்கு விடை கொடுப்பதற்காகவே திரும்பி வந்த அவரது பெருந்தன்மையை பார்த்து ஸ்தம்பித்து போய்விட்டேன்” என்று நெகிழ்ந்து போய் கூறியுள்ளார் ஜாக்கி ஷெராப்.