10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒரு காலக்கட்டத்தில் பாலிவுட்டில் பல சர்ச்சைகளை கடந்து 100 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். அதன்பிறகு ஹிந்தி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு வெளிவந்த கே.ஜி.எப் 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் சஞ்சய் தத்.
தமிழில் 'லியோ' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் ' டபுள் ஐ ஸ்மார்ட் சங்கர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு சஞ்சய் தத் வாங்கிய சம்பள தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ படத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் பெற்று வந்தார் சஞ்சய் தத். தற்போது இந்த படத்தில் 60 நாட்கள் நடிப்பதற்காக தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தியுள்ளார் என கூறப்படுகிறது.