அதிக சதவீதம் கேட்கும் 'ஜனநாயகன்' ; தயங்கும் தியேட்டர் உரிமையாளர்கள் : பிரச்னை தீருமா? | 'பராசக்தி' படத்தில் அண்ணாதுரை... கருணாநிதியும் இருக்கிறாரா? | 2வது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்ற சிபி சக்கரவர்த்தி | ரத்தக்கண்ணீருக்கு புதிய அங்கீகாரம் | ஓடிடி டிரெண்டிங்கில் 'பகவந்த் கேசரி' | பொங்கல் போட்டி : டிரைலர்களில் முந்தும் 'ஜனநாயகன்' | எனக்கு யாரும் முழு சம்பளம் தந்ததில்லை: ரச்சிதா மகாலட்சுமி பேச்சு | 'திரெளபதி 2' பாடலில் சின்மயி குரல் நீக்கம்: இயக்குனர் பேட்டி | டிரைலரிலும் போட்டி போடும் 'பராசக்தி' | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் நடித்த பிரேம் நசீர் மகன் |

பாலிவுட்டின் முன்னணி கலை இயக்குனர் நிதின் சந்திரகாந்த். பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணியாற்றி வந்தார். தேவதாஸ், ஜோதா அக்பர், உள்ளிட்ட பல சரித்திர படங்களுக்கு அரண்மனை செட் அமைத்து புகழ்பெற்றவர். சிறந்த கலை இயக்கத்துக்கான தேசிய திரைப்பட விருதை 4 முறை பெற்றுள்ளார்.
57 வயதான நிதின் சந்திரகாந்த் மும்பை கர்ஜத் பகுதியில் அமைந்திருக்கும் தனது என்.டி ஸ்டுடியோவில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கான காரணம் பற்றி கூறப்படுவதாவது: ஆர்ட் டைரக்டராக பணியாற்றி நல்ல வசதியோடு வாழ்ந்த நிதின் சந்திரகாந்த் 2005ம் ஆண்டு கர்ஜத்தில் தனது என்.டி ஸ்டுடியோவை கட்டினார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு என்.டி ஸ்டுடியோவில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு, செட்டுகள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. இந்த ஸ்டூடியோவுக்காக அவர் இன்சூரன்ஸ் எதுவும் செய்து வைத்திருக்கவில்லை. இதனால் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார். பல தனியார் நிறுவனங்களில் பல்வேறு கட்டங்களாக 252 கோடி கடன் பெற்றுள்ளார். இந்த கடன்களை திருப்பிக் கேட்டு நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வந்துள்ளது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான நிதின் சந்திரகாந்த் அந்த ஸ்டூடியோவிலேயே தற்கொலை செய்ததாக பாலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.